பயணங்களால் நாம் பல விஷயங்களை அறிகிறோம். பலதரப்பட்ட மக்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. பயணங்களில் ஏற்படும் அனுபவங்கள் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகின்றன.பல அனுபவத்தை ஒரு சில பயணங்கள் கொடுத்துவிடும் .சில வகையான மனிதர்கள் இருப்பார்கள், எப்போதும் எதையாவது தேடிக் கொண்டே இருப்பது அவர்களின் வேலை.அதில் நானும் ஒருத்தி. எனது தேடல் மலை ,காடு , கடல் என தொடர்ந்து கொண்டிருக்கும் .....
உத்தரகாண்ட் ( Kuari pass & pangarchulla peak ) trek -1
ஏப்ரல் 27
காஷ்மீரி கேட்(DELHI) பஸ் ஸ்டாண்டுக்கு (ISBT)வந்து சேர இரவு 10 மணி ஆனது .எங்களுடன் ட்ரெக்கிங் வர இருக்கும் மற்ற இரு நண்பர்கள் வர மேலும் 20 நிமிடம் ஆனது.அவர்களிடம் எங்களை அறிமுகப் படுத்திக் கொண்டு அருகிலிருந்த கேஎப்சியில் டின்னர் முடித்து விட்டு முன்னதாக புக்கிங் செய்யப்பட்டிருந்த ரிஷிகேஷ் செல்லும் Volvo பஸ்சை கண்டுபிடித்து அவரவர் இருக்கையில் அமரும்போது தூக்கம் கண்ணைக் கட்டியது இரண்டு நாள் பயணக்களைப்பில் பஸ் கிளம்பி பத்து நிமிடத்தில் உறங்கிபோனேன்.
காலை 5 மணி கண்விழிக்கும்போது பஸ் ஹரிதுவார் வழியாக கங்கை நதியுடன் பயணித்துக் கொண்டிருந்தது.கங்கை நதியின் அழகும் செல்லும் வழியில் இருக்கும் வீடுகளும் அந்த ஊர் மக்களின் முகங்கள் எங்களைப்போல சுற்றுலா வந்த ட்ரெக்கர்ஸ் என்று கண்ணில் பார்த்து அனைத்தையும் பார்க்கும் ஆவலில் ஜன்னல் திரையை முழுவதும் விலக்கி விட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன் .
ரிஷிகேஷ் வர ஒரு மணி நேரம் பயணிக்க வேண்டும்.ரிஷிகேஷ் இந்தியாவின் வடக்கு மாநிலமான உத்தரகாண்டில் ஹிமாலயன் மலைத்தொடரில் கங்கை நதிக்கு அருகில் அமைந்துள்ளது .இது"Yoga capital of the world " என அழைக்கப்படுகிறது.யோகா மற்றும் தியானத்திற்கு இந்த நகரம் பெயர் பெற்றது,இது இந்துக்களின் புனிதமான நகரங்களில் ஒன்று இங்கு சாகச விளையாட்டுக்கள் (white water rafting,kayaking and surfing )மிகவும் பிரபலமானது இதை அனுபவிக்கவே வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகின்றனர் மேலும் பத்ரிநாத் கேதார்நாத் கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி யாத்திரை செல்வதற்கான துவக்க புள்ளியாக உள்ளது.
ஏப்ரல் 28
பஸ் ரிஷிகேஷ் பஸ் ஸ்டாண்டிற்கு காலை 6 மணிக்கு வந்தடைந்தது காலை நேரம் என்பதால் அதிக கூட்டமில்லை பேருந்துகளும் ஓர் இரு கார்களும் ஒரு நான்கு ஐந்து பேர் அமரக்கூடிய டீக்கடை அதில் இரண்டு பேர் என வெறிச்சோடி இருந்தது முந்தைய நாள் டெல்லி வெய்யில்( 44°)இருந்த எங்களுக்கு உடலை மெல்ல ஊடுருவும் குளிர் உற்சாகமாக இருந்தது.கூடவே டீ சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என தோன்றவே அருகில் இருந்த டீக்கடையில் நானும் சோனமும் லைட் டீ சொல்லவே மகி மற்றும் ஜித்து காபி ஆர்டர் செய்தனர்,இதற்கிடையில் ஆண்களின் சராசரி உயரத்திற்கு சற்று குறைவான உயரத்தில் ஜாக்கிசானின் உருவ ஒற்றுமையுடைய ஒருவர் வந்து அறிமுகம் செய்துகொண்டார் அவர் எங்கள் பயண வழிகாட்டி chainsingh அவருடன் cook மோகன் மற்றும் டிரைவர் பிரித்தம் பாபா அவர்களும் எங்களுடன் காபி குடிக்க அடுத்த கட்ட பயணத்திட்டம் பற்றி chainsingh விளக்கினார்.
முதல் நாள் பயணம் ஜோஷிமத்துக்கு ஜீப்பில் ஆரம்பமானது .ரிஷிகேஷிலிருந்து ஜோஷிமத்துக்கு 255 கிலோமீட்டர் தூரம் கிட்டத்தட்ட 9 மணி நேர மலைபயணம் . நாங்கள் செல்லும் வழியெங்கும் ரோடு வேலை செய்யும் பணியாட்கள்,பாலைவனப் புயல் என நினைக்கத் தோன்றும் அளவிற்கு மண்ணை வாரி இறைத்து செல்லும் லாரிகள், பள்ளத்தாக்குகள்,பச்சை பசேலென்று உயர்ந்த மரங்கள், தொலைதூரத்தில் பனிச்சிகரங்கள் ,மலைச்சரிவுகள் ,ஆங்காங்கே தொங்கு பாலங்கள் என பார்க்க பார்க்க கண்ணிற்கு விருந்தாகிறது .
மேலும் சற்று கலங்கிய நதிநீர் உடன் பச்சை (LIKE GREEN COLOUR)நதிநீர் கலக்கும் இடம் இதயம் பறிபோகும் அழகு இதை பஞ்ச பிராயாக் என அழைக்கிறார்கள்.
ரிஷிகேஷிலிருந்து ஜோஷிமத்துக்கு
70 கிமி தொலைவில் devprayag (Confluence of Bhagirathi and Alakananda)
140 கிலோ மீட்டர் தொலைவில் ருத்ரபிரயாக் (Confluence of Alakananda and Mandakini)
169 கிலோமீட்டர் தொலைவில் கர்ணப் பிரயாக் (Confluence of Alakananda and Pindar)
190 கிலோமீட்டர் தொலைவில் நந்த பிரயாக் (Confluence of Alakananda and Nandakini)
மற்றும் ஜோஷிமத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் விஷ்ணு பிரயாக் (Confluence of Dhauli Ganda and Alakananda).போகும் வழியில் கர்ணபிரயாக் அருகில் உள்ள ஒரு உணவகத்தில் அதன் அழகை பார்த்தவாறு மதிய உணவை முடித்துக்கொண்டு எங்கள் பயணம் தொடர்ந்தது......
~தீரா தேடல் தொடரும்...,

No comments:
Post a Comment