காலை 5.50 மணி சோனமும் ஜித்துவும் மேலும் கொஞ்ச நேரம் தூங்குவதாக கூறியதால்,
நானும் மகியும் சன் ரைஸ் பார்க்க கிளம்பினோம்.
நாங்கள் செல்வதற்குள் சூரியன் வெளியே வந்துவிட்டான்.ஒன்றரை மணி நேரம் போனது கூட தெரியாமல் அங்கேயே உட்கார்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தோம்.கீழிருந்து chainsingh கையசைக்க கேம்ப்புக்கு திரும்பினோம்.அங்கே முந்தய நாள் நாங்கள் பார்த்த மலை நாய் எங்கள் டென்டை அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தது.அதற்கு ஒரு paratha வை கொடுக்க, சாப்பிட்டது .
சிறிது நேரம் அதனுடன் பேசித் திரும்ப, காலை உணவுடன் தயாராக இருந்தாள் சோனம்.
சாப்பிட்டுவிட்டு மற்ற இரு நாளுக்கான உடமைகள் ஸ்லிப்பிங் பேக்,ஸ்லீப்பிங் மேட் எனஅனைத்தையும் பேக் செய்து,கிளைம்பிங் வாட்டர்ப்ரூப் gaiters அணிந்து கிளம்ப மணி 11 ஆகியிருந்தது.
![]() |
| காலை உணவு |
![]() |
| Ready to trek |
பதினைந்து நிமிட மலையேற்றத்திற்கு பிறகு, முதல் பனி மலையேற்றம்.முதலில் chainsingh மற்றும் சோனம் முன்னே செல்ல, பின்னே நான் ஜித்து , மகியென ஒவ்வொருவராக பின் தொடர்ந்தோம்.இரண்டு அடி எடுத்து வைக்கும் முன்னரே கால்கள் சறுக்கி கீழே இழுத்தது.கையை ஊண்றி எழ , மீண்டும் சறுக்கல் என் மூன்றாவது சறுக்கலுக்கு முன் chainsingh வந்து உதவினார்.நான் இரண்டடி மேலே செல்வதற்குள் ஜித்துவிற்கு சறுக்கியது.
அவர் ஆரம்பித்த இடத்துக்கே சென்றுவிட்டார்.இப்படியே ஒவ்வொருவராக சிறிது ஓய்வெடுத்து விட்டு மீண்டும் பனி பாதையில் நடக்க ஆரம்பித்தோம்.
![]() |
| முதல் சறுக்கல் |
மலையேற்றம் முழுவதும் காட்சிகள் வியக்கத்தக்கவையாக இருந்தன.இந்த பயணத்தின்போது கர்வால் ஹிமாலயஸ்-கமட் (7756 மீ), நந்த தேவி (இந்தியாவின் மிக உயர்ந்த சிகரம்-7816 மீ), துரோணகிரி ,திரிஷுல் (7120 மீ), சௌகாம்பா (7128 மீ),மற்றும் நீல்காந்த் (6500 மீ)உட்பட இந்தியாவின் மிக உயர்ந்த சிகரங்களை நீங்கள் காணலாம்.ஆனால் இப்போது வரை அனைத்தும் எனக்கு நம்பமுடியாததாகவே இருக்கிறது. இரண்டு மணி நேர பனி மலையேற்றத்திற்கு பிறகு, பனி மூடிய மலைகள் இப்போது மிகவும் நெருக்கமாக இருந்தன.
செங்குத்தான மலைபாதையின் அடர்ந்த பனியில் எனது கால் 3 அடி கிழே சென்றது .25 வருட காலத்தில் (கோடை )இல்லாத அளவிற்கு இந்த வருடம் பனி இருக்கிறது, நீங்கள் அதிர்ஷ்டசாலி
முதல் இமயமலை பயணத்திலே நீங்கள் இதை பார்க்கிறீர்கள் என்றார் chainsingh . எங்களுக்கு எதிராக வலுவான காற்றடிக்க நடப்பது கடினமாக இருந்தது.
![]() |
| Kuari pass |
இலக்கையடைய நாங்கள் கிட்டதட்ட 50 நிமிடம் எடுத்துக்கொண்டோம்.ஆனால் மோகன் இரவு தங்குவதற்கான டென்ட் , ஸ்டவ் மற்றும் சமைப்பதற்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு எங்களுக்கு முன்னே வெகுதொலைவில் சென்றுக்கொண்டிருந்தார். இப்பொழுது ஒரு புறத்தில் 60 டிகிரிசெங்குத்தாகவும் மறுபுறத்தில் 80 டிகிரி செங்குத்தாகவும் பனி நிரம்பிய பள்ளத்தாக்கின் நடுவில் ஒருவர் மட்டும் நடக்ககூடிய ரிட்ஜ்லில்(Ridge) நடந்துக் கொண்டிருக்கிறோம்.
ஊதா நிற ஹிமாலயன் பூக்கள் ஆங்காங்கே ஒரே குடும்பமாய் சிரித்துக்கொண்டிருந்தன.அவற்றை கோட்கமலேயே அவற்றுடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டேன்.வழியெங்கும் ஆங்காங்கே சிறிய பெரிய பாறைகள்,அதைத் தாண்டி நடக்க சிரமமாக இருந்தது.3 மணி இருக்கலாம், மதிய உணவை உலர்ந்த புல் கொண்ட ஒரு பகுதியை கண்டுபிடித்து அங்கே உட்கார்ந்து சாப்பிட முடிவெடுத்தோம்.சாப்பிட்டுவிட்டு மீண்டும் நடக்க பனிமலை ஆரம்பமானது.
இப்பொழுது பனிமலை சரிவில் பக்கவாட்டில் நடக்க வேண்டும்.முன்பை விட கடினமான பயணம்.
மலை ஏற்றத்தை விட பக்கவாட்டில் நடப்பது மிகவும் ஆபத்தானதாக தோன்றியது. ஒரு அடி வழுக்கினாலும் பள்ளத்தாக்கில் விழவேண்டியதுதான்.
மாலை 4.30 மணிக்கு பங்கர்சுலா பேஸ் கேம்பை அடைந்தபோது காற்று பலமாகஅடித்துக்கொண்டிருந்தது.அதற்குள் மோகன் டென்ட் அமைத்து அதன் அருகில் ஸ்லீப்பிங் மேட்டை மறைத்து சிறிய தற்காலிக கிச்சனை உருவாக்கி இருந்தார்.சூரியன் தொடுவானத்தில் மேகத்திற்குள் ஒளிந்து ஒளிச்சிதறலாய் தெரிந்தான். அதை ரசித்துக்கொண்டே Maggi தயாராக, சாப்பிட்டுடோம்.சூரியன் இளஞ்சிவப்பாகி கண்களுக்குப் புலப்படாமல் மறையத் தொடங்கினான்.அன்றைய சூரிய அஸ்தமனம் எங்களுக்கு புதிய உணர்ச்சியும் , காட்சிகளையும் வாரிக்கொடுத்தது .
வடக்கு -தெற்கு ரிட்ஜ்லில் (Ridge) எங்களது டென்ட் அமைந்திருந்தது. ஒருபுறம் நாங்கள் நடந்து வந்த பனி மலை, மறுபுறம் மிகப் பெரிய பள்ளத்தாக்கு. அங்கிருந்து பார்க்கும் பொழுது பங்கர்சுலா மிக அருகில் காட்சியளித்தது.எதிர்புறம் இமயமலை தொடரின் சிகரங்கள். 'நாங்களும் உயரம் தான்...நாங்களும் அழகு தான்...' என கண்களுக்கு காட்சிகளை பரிசாக தந்தது.வெகு நேரம் போனதே தெரியவில்லை.
![]() |
| Sunset |
காற்றின் வேகம் அதிகமானதால் மோகனின் தற்காலிக கிட்சன் பிரிய ஆரம்பித்து அடுப்பும் அணைந்தது.பின்னர் அவரது சமையலறையை அமைப்பதற்கு ஒரு பெரிய பாறையின் கீழ் ஒரு இடத்தை கண்டுபிடித்தார். இரவு ஆரம்பித்ததும் குளிர் -10° தொட்டது. காற்று கடுமையானது மற்றும் மேகங்கள் இருட்டின.
நாளை விடியும்முன் 2.30 மணிக்கெல்லாம் கிளம்பவேண்டும் என chainsingh சொன்னதால் இரவு உணவிற்கு பின்னர் டேபேக்கில் 3 லிட்டர் தண்ணீர் ,ரெயின்கோட் , நள்ளிரவில் பயணம் மேற்கொள்வதால் ஹெட் டார்ச் மற்றும் சில முக்கியமான பொருட்களை மட்டும் எடுத்து வைத்துகொண்டு தூங்க சென்றோம் . இரவு முழுவதும் இடி மின்னல் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.
குளிர் -6 ° தொட்டிருந்தது.காற்றின் வேகம் மிகஅதிகமாக இருந்ததால் காற்றில் டென்ட் பறந்து விடுமோ என்ற பயத்திலேயே உறங்கினோன்
~தீரா தேடல் தொடரும்...,




















No comments:
Post a Comment