Tuesday, 30 April 2019

உத்தரகாண்ட் ( Kuari pass & pangarchulla peak ) trek - part 3



        காலை 5.50 மணி சோனமும் ஜித்துவும் மேலும் கொஞ்ச நேரம் தூங்குவதாக கூறியதால்,
நானும் மகியும் சன் ரைஸ் பார்க்க கிளம்பினோம்.

நாங்கள் செல்வதற்குள் சூரியன் வெளியே வந்துவிட்டான்.ஒன்றரை மணி நேரம் போனது கூட தெரியாமல் அங்கேயே உட்கார்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தோம்.கீழிருந்து chainsingh கையசைக்க கேம்ப்புக்கு திரும்பினோம்.அங்கே முந்தய நாள் நாங்கள் பார்த்த மலை நாய் எங்கள் டென்டை அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தது.அதற்கு ஒரு paratha வை கொடுக்க, சாப்பிட்டது .

சிறிது நேரம் அதனுடன் பேசித் திரும்ப, காலை உணவுடன் தயாராக இருந்தாள் சோனம்.
சாப்பிட்டுவிட்டு மற்ற இரு நாளுக்கான உடமைகள் ஸ்லிப்பிங் பேக்,ஸ்லீப்பிங் மேட் எனஅனைத்தையும் பேக் செய்து,கிளைம்பிங் வாட்டர்ப்ரூப் gaiters அணிந்து கிளம்ப மணி 11 ஆகியிருந்தது.

காலை உணவு

Ready to trek

          பதினைந்து நிமிட மலையேற்றத்திற்கு பிறகு, முதல் பனி மலையேற்றம்.முதலில் chainsingh மற்றும் சோனம் முன்னே செல்ல, பின்னே நான் ஜித்து , மகியென ஒவ்வொருவராக பின் தொடர்ந்தோம்.இரண்டு அடி எடுத்து வைக்கும் முன்னரே கால்கள் சறுக்கி கீழே இழுத்தது.கையை ஊண்றி எழ , மீண்டும் சறுக்கல் என் மூன்றாவது சறுக்கலுக்கு முன் chainsingh வந்து உதவினார்.நான் இரண்டடி மேலே செல்வதற்குள் ஜித்துவிற்கு சறுக்கியது.
அவர் ஆரம்பித்த இடத்துக்கே சென்றுவிட்டார்.இப்படியே ஒவ்வொருவராக சிறிது ஓய்வெடுத்து விட்டு மீண்டும் பனி பாதையில்  நடக்க ஆரம்பித்தோம்.

முதல் சறுக்கல்

       மலையேற்றம் முழுவதும் காட்சிகள் வியக்கத்தக்கவையாக இருந்தன.இந்த பயணத்தின்போது கர்வால் ஹிமாலயஸ்-கமட் (7756 மீ), நந்த தேவி (இந்தியாவின் மிக உயர்ந்த சிகரம்-7816 மீ), துரோணகிரி ,திரிஷுல் (7120 மீ), சௌகாம்பா (7128 மீ),மற்றும் நீல்காந்த் (6500 மீ)உட்பட இந்தியாவின் மிக உயர்ந்த சிகரங்களை நீங்கள் காணலாம்.ஆனால் இப்போது வரை அனைத்தும் எனக்கு நம்பமுடியாததாகவே இருக்கிறது. இரண்டு மணி நேர பனி மலையேற்றத்திற்கு பிறகு, பனி மூடிய மலைகள் இப்போது மிகவும் நெருக்கமாக இருந்தன.



        செங்குத்தான மலைபாதையின் அடர்ந்த பனியில் எனது கால் 3 அடி கிழே சென்றது .25 வருட காலத்தில் (கோடை )இல்லாத அளவிற்கு இந்த வருடம் பனி இருக்கிறது, நீங்கள் அதிர்ஷ்டசாலி
முதல் இமயமலை பயணத்திலே நீங்கள் இதை பார்க்கிறீர்கள் என்றார் chainsingh . எங்களுக்கு எதிராக வலுவான காற்றடிக்க நடப்பது கடினமாக இருந்தது.

Kuari pass

        இலக்கையடைய நாங்கள் கிட்டதட்ட 50 நிமிடம் எடுத்துக்கொண்டோம்.ஆனால் மோகன் இரவு தங்குவதற்கான டென்ட் , ஸ்டவ் மற்றும் சமைப்பதற்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு எங்களுக்கு முன்னே வெகுதொலைவில் சென்றுக்கொண்டிருந்தார்.  இப்பொழுது ஒரு புறத்தில் 60 டிகிரிசெங்குத்தாகவும் மறுபுறத்தில் 80 டிகிரி செங்குத்தாகவும் பனி நிரம்பிய பள்ளத்தாக்கின் நடுவில் ஒருவர் மட்டும் நடக்ககூடிய ரிட்ஜ்லில்(Ridge) நடந்துக் கொண்டிருக்கிறோம்.





    ஊதா நிற ஹிமாலயன் பூக்கள் ஆங்காங்கே ஒரே குடும்பமாய் சிரித்துக்கொண்டிருந்தன.அவற்றை கோட்கமலேயே அவற்றுடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டேன்.வழியெங்கும் ஆங்காங்கே சிறிய பெரிய பாறைகள்,அதைத் தாண்டி நடக்க சிரமமாக இருந்தது.3 மணி இருக்கலாம், மதிய உணவை உலர்ந்த புல் கொண்ட ஒரு பகுதியை கண்டுபிடித்து அங்கே உட்கார்ந்து சாப்பிட முடிவெடுத்தோம்.சாப்பிட்டுவிட்டு மீண்டும் நடக்க பனிமலை ஆரம்பமானது.



       இப்பொழுது பனிமலை சரிவில் பக்கவாட்டில் நடக்க வேண்டும்.முன்பை விட கடினமான பயணம்.
மலை ஏற்றத்தை விட பக்கவாட்டில் நடப்பது மிகவும் ஆபத்தானதாக தோன்றியது. ஒரு அடி வழுக்கினாலும் பள்ளத்தாக்கில் விழவேண்டியதுதான்.
          மாலை 4.30 மணிக்கு பங்கர்சுலா பேஸ் கேம்பை அடைந்தபோது காற்று பலமாகஅடித்துக்கொண்டிருந்தது.அதற்குள் மோகன் டென்ட் அமைத்து அதன் அருகில் ஸ்லீப்பிங் மேட்டை மறைத்து சிறிய தற்காலிக கிச்சனை உருவாக்கி இருந்தார்.சூரியன் தொடுவானத்தில் மேகத்திற்குள் ஒளிந்து ஒளிச்சிதறலாய் தெரிந்தான். அதை ரசித்துக்கொண்டே Maggi தயாராக, சாப்பிட்டுடோம்.சூரியன் இளஞ்சிவப்பாகி  கண்களுக்குப் புலப்படாமல் மறையத் தொடங்கினான்.அன்றைய  சூரிய அஸ்தமனம் எங்களுக்கு புதிய உணர்ச்சியும் , காட்சிகளையும் வாரிக்கொடுத்தது .



           வடக்கு -தெற்கு ரிட்ஜ்லில் (Ridge) எங்களது டென்ட் அமைந்திருந்தது. ஒருபுறம் நாங்கள் நடந்து வந்த பனி மலை, மறுபுறம் மிகப் பெரிய பள்ளத்தாக்கு. அங்கிருந்து பார்க்கும் பொழுது பங்கர்சுலா மிக அருகில் காட்சியளித்தது.எதிர்புறம் இமயமலை தொடரின் சிகரங்கள். 'நாங்களும் உயரம் தான்...நாங்களும் அழகு தான்...' என கண்களுக்கு காட்சிகளை பரிசாக தந்தது.வெகு நேரம் போனதே தெரியவில்லை.

Sunset




         காற்றின் வேகம் அதிகமானதால் மோகனின் தற்காலிக கிட்சன் பிரிய ஆரம்பித்து அடுப்பும் அணைந்தது.பின்னர் அவரது சமையலறையை அமைப்பதற்கு ஒரு பெரிய பாறையின் கீழ் ஒரு இடத்தை கண்டுபிடித்தார். இரவு ஆரம்பித்ததும் குளிர் -10° தொட்டது. காற்று கடுமையானது மற்றும் மேகங்கள் இருட்டின.
           நாளை விடியும்முன் 2.30 மணிக்கெல்லாம் கிளம்பவேண்டும் என chainsingh  சொன்னதால்  இரவு உணவிற்கு பின்னர் டேபேக்கில் 3 லிட்டர் தண்ணீர் ,ரெயின்கோட் , நள்ளிரவில் பயணம் மேற்கொள்வதால் ஹெட் டார்ச் மற்றும் சில முக்கியமான பொருட்களை மட்டும் எடுத்து வைத்துகொண்டு தூங்க சென்றோம் . இரவு முழுவதும் இடி மின்னல் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.
       குளிர் -6 ° தொட்டிருந்தது.காற்றின் வேகம்  மிகஅதிகமாக இருந்ததால் காற்றில் டென்ட் பறந்து விடுமோ என்ற பயத்திலேயே உறங்கினோன்

                                         ~தீரா தேடல் தொடரும்...,

Monday, 29 April 2019

உத்தரகாண்ட் ( Kuari pass & pangarchulla peak ) trek - part 2


     ஜோஷிமட் வந்து சேர மாலை மணி 5 ஆனது நாங்கள் புக் செய்திருந்த ஹோட்டலுக்கு வரும் போது சூரியன் அஸ்தமனமாகக்காத்திருந்தது  ஜோஷிமட் கடல் மட்டத்திலிருந்து  6150 அடி (1875 mtr)உயரத்தில் அமைந்துள்ள ஒரு மலை நகரம்.ஜோஷிமட்டில் உள்ள ஒவ்வொரு மூலையிலிருந்தும் இமயமலைகளின் பார்வை அழகாக உள்ளது.ஹோட்டல் அறையில் எங்களது உடமைகளை வைத்துவிட்டு குளிர் வாட்டுவதைக் கூட பொருட்படுத்தாமல் இமயமலைத்தொடரை ரசித்தோம்  பச்சை போர்வையில் அதன் முகடுகல் மட்டும் வெண் பணியாலும் மூடப்பட்டிருந்தது. குளிருக்கு இதமாக எங்கள் கைடு good day பிஸ்கட் மற்றும் காபியுடன் வந்து  எங்களுடன் அடுத்த நாள் பயணத்திட்டம் பற்றி பேசலானார் அரை மணி நேர உரையாடலுக்கு பின் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் சென்று குளித்துவிட்டு ஜோஷிமட்யை சுற்றிப் பார்க்க கிளம்பினோம்.
Room view

       இது ஒரு சிறிய டவுன் இருபுறமும் கடைகள் குளிர்காலத்தில் உடுத்திக்கொள்ளும் உடைகள் இங்கு அதிகமாக விற்கப்படுகின்றன . மலையேற்றத்துக்கு தேவையான அனைத்து ஜெர்க்கிங்ஸ் ,ஜாக்கெட்ஸ்,மப்லர் ,கேப் ,பேக்பேக்,  கம்பளி மற்றும் பேக்கரி ,காய்கறி கடைகள் ,நகைக்கடை என அனைத்தும் இங்கு உள்ளது.நாங்கள் மலையேற்றத்திற்கு தேவையான அனைத்தும் வைத்திருந்ததால் சாப்பிட சில சாட்அயிட்டம் மட்டும் வாங்கிக் கொண்டோம். கொஞ்ச நேரம் சுற்றி விட்டு அங்கிருந்து புறப்பட்டு ஹோட்டலுக்கு வரவும் எங்கள் டின்னர் ரெடி ஆக இருந்தது இரவு உணவை முடித்து விட்டு டிவி பார்த்தோம் .
       சிறிது நேரத்தில் chainsingh வந்து பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் முன்னதாக பிளான் செய்திருந்த பயண வழித்தடத்தில் மாற்றம் செய்திருப்பதாகக் கூறினார் எங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை இருந்தாலும் சூழ்நிலை காரணமாக ஏற்றுக்கொள்ள அதன் வழித்தடத்தை பற்றி  chainsingh விளக்கினார் .
ஏப்ரல் 29 : கர்சி கிராமம் to குலாரா பேஸ்கேம்ப்
ஏப்ரல் 30 : குலாரா பேஸ்கேம்ப் to பங்கர்சுலா பேஸ்கேம்ப்
மே 1 : பங்கர்சுலா பேஸ்கேம்ப் to பங்கர்சுலா சப்மிட் மற்றும் மீண்டும் குலாரா
மே 2 : குலாரா to கர்சி (மாற்றுபாதையில் )

ஏப்ரல் 29

Sonam,me and chain singh

            காலை சீக்கிரமாகவே  சிற்றுண்டி தயார் செய்திருந்தனர். 9 மணிக்கெல்லாம் சிற்றுண்டியை முடித்து கொண்டு அவரவர் தேவையான உடமைகளை சரிபார்த்து மதிய உணவை பேக் செய்து கிளம்பினோம்.45 நிமிட ஜீப் பயணம் மணி 10 கர்சி கிராமத்தை அடைந்தபோது அங்கிருந்து எங்கள் முதல் நாள் மலை ஏற்றம் ஆரம்பமானது. Cook மோகன் மற்றும் பிரிதம் பாபா டென்ட்,அடுப்பு மற்றும் சமைக்க தேவையான பொருட்களை mule லில் (கோவேறு கழுதை) ஏற்றிக்கொண்டு வேறு பாதையில் சென்று விட்டனர். நாங்கள் நால்வர் மற்றும் எங்கள் வழிகாட்டி chainsingh
ஒருவர் பின் ஒருவராக நடக்க ஆரம்பித்தோம்.



       நான் இந்த கோடை காலத்தில் என் முதல் மலையேற்றத்தைஆரம்பித்திருக்கிறேன். தேவையான உடைகள், பவர்பேங்க் , மெடிக்கல் கிட்  மற்றும் நான்கு லிட்டர் தண்ணிர் என கிட்டதட்ட 10 கிலோ பேக்கை தூக்கிக்கொண்டு நடப்பது சற்று சிரம்மமாக இருந்தாலும் மலையேற்றம் எனக்கு உற்சாகமாக இருந்தது .இதமான, புத்துணர்ச்சியூட்டும் மலைக் காற்றை சுவாசித்தேன் அது கிளர்ச்சியூட்டும் உணர்வை  கொடுத்தது.


நான்கு புறமும் மரங்கள் பனியில் நனைந்திருந்தது ,ஆழமான மற்றும் சிறிய பள்ளத்தாக்குகளும் ,ஆடு மேய்ப்பர்களோடு சேர்ந்து காணப்படும் மலை நாய் என பார்த்துக்கொண்டு நடக்கலானோம் மலை நாய் என்னோட tigerஐ ( நிஜ புலினு நினைச்சுக்காதீங்க அது எங்க வீட்டு நாய் குட்டி )ஞாபகப்படுத்தியது அவனை பிரிந்து நான்கு நாட்கள் ஆனது  நான் ஆபீஸிலிருந்து வீட்டிற்கு வந்தவுடன்  என்னுடனே விளையாடிக்கொண்டு இருப்பான் நான் அவனை மிகவும் மிஸ் செய்கிறேன் .

மலை நாய்

        முதல் சில மணிநேரத்தில் மலை என்னை மிகவும் சோர்வாக்கியது  நான் மிகவும்சோர்வடைந்து விட்டேன் என்னால் நடக்க முடியவில்லை அருகில் இருந்த பாறையில் அமர்ந்து சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டேன் மூச்சு விடுதல் சிரமமாக இருந்தது, என்னால் முடியாது என தோன்றியது .

வழிகாட்டி chainsingh பண்பானவர் என்னை ஊக்கபடுத்தினார் பழக இனிமையானவராக இருந்தார். பொதுவாக  அமைதியாக இருந்தாலும் அவ்வப்போது எங்கள் உரையாடலில் கலந்து கொண்டார். உயரம் செல்ல செல்ல குளிர் அதிகமாகிக்கொண்டே இருந்தது. வால்நட் ,பைன் மரங்களை கடந்து மலை ஏரிக்கொண்டிருக்கிறோம் பாதை முடிவதாகத் தெரியவில்லை.மேலே செல்லச்செல்ல மலை கீழே போய்கொண்டிருக்கிறது .
       மணி ஒன்று ஆனது ( 3 hrs climbing)கடந்து வந்த களைப்பு வால்நட் அல்லது ஏதோ ஓரு காட்டு மரம் தனியாக உயரமாக இருந்தது. அதன் அடியில் அமர்ந்து மதிய உணவை சாப்பிட ஆரம்பித்தோம் .ஏதோ ஒரு ஜீவராசியின் எலும்கூடு தென்பட்டன அதை வைத்து  செல்பி எடுத்துகொண்டோம் .பாறையின் மேல் ஹய்கிங் ஸ்டிக் ஐ வைத்து " Iron throne மீது அமர்வது போல் நினைத்து விளையாடி மகிழ்தோம் .


மதிய உணவை முடித்துவிட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தோம் .சிறிது முன்னேறியதும் பெரிய மரங்களுக்கிடையே பிங்க் நிற பூச்செடிகள் பூக்களுடன்  (pink Rhododendron) ஒரு தோட்டம் போல் காட்சி அளித்தது . எப்போ டவுன் ஹில் வரும் என கேட்டுக்கொண்டே வந்தேன் .


உயரம் செல்லச்செல்ல குளிர் அதிகமாகிக்கொண்டே இருந்தது, ஒரு இடத்தில் தூசி நிறைந்த பனி உறைந்து கிடந்தது அதுவே நாங்கள் தொட்டு ரசித்த முதல் பனி ,சிறிது முன்னேறியதும் கல் மேடையில் ஆரஞ்சு கொடியுடன் கோவில் இருந்தது அதன் அருகில் ஒரு பத்து நிமிடம் அமர்ந்து இளைப்பாறினோம் மலை ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தது ,அங்கிருந்து பார்க்கும்போது இயற்கையின் ரம்மியமான அழகை காணமுடிந்தது.இப்போது பனிமலை மிக அருகில் வந்து எங்களை உற்சாகமாக வரவேற்றது.மீண்டும் ...,வேறென்ன மலையேற்றம்தான்.


            அந்த நாளின் பயணம் முடிவுக்கு வந்தது ஆம் மாலை 4 மணி இருக்கும் ஒரு சிறிய டவுன் ஹில் , கொஞ்ச தூரத்தில் சில ஆடுகள் மோய்ந்துகொண்டு இருந்தன அங்கு ஒரு நீரோடை அதை தாண்டி இரண்டு நீல நிற டென்ட் மற்றும் ஒரு மஞ்சள் வித் புளு நிற டென்ட் தெரிந்தது அதை பார்த்து நான் அடைந்த சந்தோசத்திற்கு அளவில்லை .சொர்கமே கண் முன்னால் தெரிந்தது ,"குலாரா



            எங்கள் முதல் நாள் பேஸ்கேம்ப் .  எங்களுக்கு இரண்டு மணி நேரம் முன்னதாகவே பிரிதம் மற்றும் மோகன்  வந்து சேர்ந்திருந்தனர் தூரத்திலே எங்களை சிரிப்போடு வரவேற்றனர்.ஓடிபோய் பேக்பேகை வைத்துவிட்டு அங்கு போடப்பட்டிருந்த ஸ்லிப் ஸ்டூலில் அமர்ந்ததும் தான் ரிலாக்ஸ் ஆக இருந்தது . அதற்குள் தேனீரும் வாழைப்பழ பக்கோடாவும் சூடாக வந்தது .



           ரசித்து சாப்பிட்டுவிட்டு பல போஸ்களில் போட்டோ எடுத்துக் கொண்டு நாங்கள் தங்கியிருந்த கூடாரத்தில் இருந்து  சிறிது தூரம் அன்றைய பயண கதைகளை பேசிக்கொண்டு வாக்கிங் சென்றோம். அங்கிருந்த பாறையில் நின்று பார்க்கையில் பங்கர்சுலாவின் முகடு பால் வெள்ளையில் எங்களை பார்த்து கொண்டிருந்தது.
       லேசான மழை தூர இருளும் எங்களை சூல குளிர் நடுக்க கூடாரத்துக்கு திரும்பினோம்.மேலும் ஒரு அடுக்கு ஜாக்கெட்ஸ் அணிந்துகொண்டு கிச்சன் டென்ட்டுக்கு சென்றோம் இதமான சூட்டோடு இருந்தது அரட்டை அடித்து கொண்டே dinner சாப்பிட்டுவிட்டு வெளிவரும் போது மழை தூரலும் நின்றிருந்தது நிமிர்ந்து பார்த்தேன் நான் கண்ட காட்சியை விளக்க வார்த்தைகளே இல்லை வானத்திற்கு எல்லை இல்லை என்பார்கள் ஆனால் அங்கு வானமே இல்லை நட்சத்திர கூட்டம் மட்டுமே சிரித்தது ஸ்டார் டிராக் ஆப் வைத்து நட்சத்திர குடும்பத்தை பார்த்து பிரமித்து நின்றோம். அதற்குள் பிரிதம் தீமூட்டி அதனை சுற்றி இருக்கைகள் அமைத்தார் .
Dinner

       நெருப்புக்கு அருகிலேயே இரு கைகளையும் நீட்டி குளிர்கய்ந்தோம் ஆனால் பின்பக்கம் குளிர ஆரம்பித்தது பின்பக்கம் திரும்பி குளிர்காய ஆரம்பித்தேன் முன்பக்கம் குளிர ஆரம்பித்தது இப்படியே கிரில் சிக்கன் போல் சுற்றி சுற்றி குளிர்காய்ந்தோன்.யோசித்துப் பாருங்கள் சுற்றிலும் உயர்ந்த பைன் மரங்களின் நடுவில் சிறிய சமவெளியில் கேம்ப் ஃபயர் இரண்டு நாட்களுக்கு முன் சந்தித்த நண்பர்களின் சுவரசியமான அனுபவங்கள் , வானத்தை மறைக்கும் நட்சத்திர கூட்டம் ,அமைதியான காடு கூடவே இளையராசாவின் இசை எவ்வளவு இனிமையான இரவு ..,மணி 9 இருக்கும்  மழை ஆரம்பித்தது அவரவர் டென்ட்க்கு போய் ஸ்லீப்பிங் பேக்குள் புகுந்துகொண்டோம். மழையின் சத்தம் டென்ட்டின் மீது ராகம் பாட பயணக்களைப்பில் உறங்கிப்போனோம்.

                                        ~தீரா தேடல் தொடரும்...,

Sunday, 28 April 2019

உத்தரகாண்ட் ( Kuari pass & pangarchulla peak ) trek part -1

பயணங்களால் நாம் பல விஷயங்களை அறிகிறோம். பலதரப்பட்ட மக்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. பயணங்களில் ஏற்படும் அனுபவங்கள் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகின்றன.பல அனுபவத்தை ஒரு சில பயணங்கள் கொடுத்துவிடும் .சில வகையான மனிதர்கள் இருப்பார்கள், எப்போதும் எதையாவது தேடிக் கொண்டே இருப்பது அவர்களின் வேலை.அதில் நானும் ஒருத்தி. எனது தேடல் மலை ,காடு , கடல் என தொடர்ந்து கொண்டிருக்கும் .....

உத்தரகாண்ட்  ( Kuari pass & pangarchulla peak ) trek -1

ஏப்ரல் 27
        காஷ்மீரி கேட்(DELHI) பஸ் ஸ்டாண்டுக்கு (ISBT)வந்து சேர இரவு 10 மணி ஆனது .எங்களுடன் ட்ரெக்கிங் வர இருக்கும் மற்ற இரு நண்பர்கள் வர மேலும் 20 நிமிடம் ஆனது.அவர்களிடம் எங்களை அறிமுகப் படுத்திக் கொண்டு அருகிலிருந்த கேஎப்சியில் டின்னர் முடித்து விட்டு முன்னதாக புக்கிங் செய்யப்பட்டிருந்த ரிஷிகேஷ் செல்லும் Volvo பஸ்சை கண்டுபிடித்து அவரவர் இருக்கையில் அமரும்போது தூக்கம் கண்ணைக் கட்டியது இரண்டு நாள் பயணக்களைப்பில் பஸ் கிளம்பி பத்து நிமிடத்தில் உறங்கிபோனேன்.
         காலை 5 மணி கண்விழிக்கும்போது பஸ் ஹரிதுவார் வழியாக கங்கை நதியுடன் பயணித்துக் கொண்டிருந்தது.கங்கை நதியின் அழகும் செல்லும் வழியில் இருக்கும் வீடுகளும் அந்த ஊர் மக்களின் முகங்கள் எங்களைப்போல சுற்றுலா வந்த ட்ரெக்கர்ஸ் என்று கண்ணில் பார்த்து அனைத்தையும் பார்க்கும் ஆவலில் ஜன்னல் திரையை முழுவதும் விலக்கி விட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன் .
        ரிஷிகேஷ் வர ஒரு மணி நேரம் பயணிக்க வேண்டும்.ரிஷிகேஷ் இந்தியாவின் வடக்கு மாநிலமான உத்தரகாண்டில் ஹிமாலயன் மலைத்தொடரில் கங்கை நதிக்கு அருகில் அமைந்துள்ளது .இது"Yoga capital of the world " என அழைக்கப்படுகிறது.யோகா மற்றும் தியானத்திற்கு இந்த நகரம் பெயர் பெற்றது,இது இந்துக்களின் புனிதமான நகரங்களில் ஒன்று இங்கு சாகச விளையாட்டுக்கள் (white water rafting,kayaking and surfing )மிகவும் பிரபலமானது இதை அனுபவிக்கவே வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகின்றனர் மேலும் பத்ரிநாத் கேதார்நாத் கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி யாத்திரை செல்வதற்கான துவக்க புள்ளியாக உள்ளது.

 ஏப்ரல் 28
        பஸ் ரிஷிகேஷ் பஸ் ஸ்டாண்டிற்கு காலை 6 மணிக்கு வந்தடைந்தது காலை நேரம் என்பதால் அதிக கூட்டமில்லை பேருந்துகளும் ஓர் இரு கார்களும் ஒரு நான்கு ஐந்து பேர் அமரக்கூடிய டீக்கடை அதில் இரண்டு பேர் என வெறிச்சோடி இருந்தது முந்தைய நாள் டெல்லி வெய்யில்( 44°)இருந்த எங்களுக்கு உடலை மெல்ல ஊடுருவும் குளிர் உற்சாகமாக இருந்தது.கூடவே டீ சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என தோன்றவே அருகில் இருந்த டீக்கடையில் நானும் சோனமும்  லைட் டீ சொல்லவே மகி மற்றும் ஜித்து காபி ஆர்டர் செய்தனர்,இதற்கிடையில் ஆண்களின் சராசரி உயரத்திற்கு சற்று குறைவான உயரத்தில் ஜாக்கிசானின் உருவ ஒற்றுமையுடைய ஒருவர் வந்து அறிமுகம் செய்துகொண்டார் அவர் எங்கள் பயண வழிகாட்டி chainsingh அவருடன் cook மோகன் மற்றும் டிரைவர் பிரித்தம் பாபா அவர்களும் எங்களுடன் காபி குடிக்க அடுத்த கட்ட பயணத்திட்டம் பற்றி chainsingh விளக்கினார்.
     முதல் நாள் பயணம் ஜோஷிமத்துக்கு ஜீப்பில் ஆரம்பமானது .ரிஷிகேஷிலிருந்து ஜோஷிமத்துக்கு 255 கிலோமீட்டர் தூரம் கிட்டத்தட்ட 9 மணி நேர மலைபயணம் . நாங்கள்  செல்லும் வழியெங்கும் ரோடு வேலை செய்யும் பணியாட்கள்,பாலைவனப் புயல் என நினைக்கத் தோன்றும் அளவிற்கு மண்ணை வாரி இறைத்து செல்லும் லாரிகள், பள்ளத்தாக்குகள்,பச்சை பசேலென்று உயர்ந்த மரங்கள், தொலைதூரத்தில் பனிச்சிகரங்கள் ,மலைச்சரிவுகள் ,ஆங்காங்கே தொங்கு பாலங்கள் என பார்க்க பார்க்க கண்ணிற்கு விருந்தாகிறது .








மேலும் சற்று கலங்கிய  நதிநீர் உடன் பச்சை (LIKE GREEN COLOUR)நதிநீர் கலக்கும் இடம் இதயம் பறிபோகும் அழகு இதை பஞ்ச பிராயாக் என அழைக்கிறார்கள்.


ரிஷிகேஷிலிருந்து ஜோஷிமத்துக்கு
 70 கிமி   தொலைவில் devprayag (Confluence of Bhagirathi and Alakananda)
140 கிலோ மீட்டர் தொலைவில் ருத்ரபிரயாக் (Confluence of Alakananda and Mandakini)
169 கிலோமீட்டர் தொலைவில் கர்ணப் பிரயாக் (Confluence of Alakananda and Pindar)
190 கிலோமீட்டர் தொலைவில் நந்த பிரயாக் (Confluence of Alakananda and Nandakini)
மற்றும் ஜோஷிமத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் விஷ்ணு பிரயாக் (Confluence of Dhauli Ganda and Alakananda).போகும் வழியில் கர்ணபிரயாக் அருகில் உள்ள ஒரு உணவகத்தில் அதன் அழகை பார்த்தவாறு மதிய உணவை முடித்துக்கொண்டு எங்கள் பயணம் தொடர்ந்தது......

                                     ~தீரா தேடல் தொடரும்...,

Saturday, 27 April 2019

Humayun's tomb is the tomb of the Mughal Emperor .The tomb was commissioned by Humayun's first wife and chief consort, Empress Bega Begum.Humayun found in 1533. It was also the first structure to use red sandstone at such a scale.The tomb was declared a UNESCO World Heritage Site in 1993,

Location: Humayun's Tomb, Nizamuddin West, New Delhi

https://en.m.wikipedia.org/wiki/Humayun%27s_Tomb






அக்‌ஷர்தாம் கோவில்~டெல்லி


           மாலை ஐந்து மணிக்கெல்லாம் டெல்லி சென்றுவிட்டேன்.முதல் விசிட் அக்‌ஷர்தாம் கோவிலுக்கு தான்.இது டெல்லி விமான நிலையத்திலிருந்து 23கிமீ தொலைவில் உள்ளது.டெல்லி ட்ராஃபிக்குக்கு இது கொஞ்சம் நெடுகால பயணம் தான்‌. அதனால் கோவிலுக்கு மெட்ரோவில் செல்வதாக எடுத்தது தரமான தீர்மானம்.NH24ல் அமைந்திருந்த அக்‌ஷர்தாம் மெட்ரோ ஸ்டேஷனிலிருந்து கோவில் அதிகம் தூரமில்லை இந்தியாவின் ஆன்மீக குருவான பகவான் சுவாமி நாராயண் நினைவாக எழுப்பப்பட்டதும் இந்தியாவின் மிகப்பெரிய இந்து கோவிலாம் இந்த ஸ்தலம்.அதன்படி கின்னஸ் புத்தகத்தில் இந்தியாவின் மிகப்பெரிய இந்து கோவில் எனும் பெருமையையும் பெற்றிருக்கிறது மற்ற இந்து கோவில்களில் இல்லாத பல பலத்த பாதுகாப்பு வழிமுறைகள் இங்கே பின்பற்றப்படுகின்றன.மொபைல், கேமரா, லக்கேஜ் பேக், வெளி உணவுகள் மற்றும் குடை உட்பட எவற்றையும் இவர்கள் உள்ளே அனுமதிப்பதில்லை.
       
            நானும் எனது trecking தோழி சோனமும் (இவர் மும்பையில் ஒரு NGO ல் பணிபுரிகிறார் ) உடமைகள் அனைத்தையும் க்ளாக் ரூமில் ஒப்படைத்து மற்ற சோதனைகள் முடிந்து உள்ளே செல்ல அதற்குள் ஒரு மணிநேரம் கழிந்திருந்தன.உள்ளே சென்றதும்வயதானவர்கள் ஓய்வெடுக்க, களைப்பானவர்கள் இளைப்பாற ஏதுவான மிகப்பெரிய வரவேற்பறை. கோவிலின் அழகியல், விபரங்கள் விவரிக்கும் guide bookம் அங்கேயே காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது‌.Water showக்கு டிக்கெட் வாங்க வரிசையில் நின்றதில் 20நிமிடம் ஓடிப்போனது.காட்சி நேரத்திற்கு மேலும் 3/4 மணிநேரம் இருந்ததால் கோவிலை சுற்றி பார்க்க நிறைய அவகாசமும் கிடைத்தது.
           
            இந்த கோவில் இந்துகட்டிடக்கலையையும் பன்பாட்டையும் ஆன்மீகத்தையும் வெளிப்படுத்தும் விதமான நிறைய சிற்பங்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.மய்யக்கோவிலில் 11அடி உயர சுவாமி நாராயண் சிற்பத்துடன் சிவபார்வதி, ராதாகிருஷ்ணன், சீதாராமன், லஷ்மி நாராயண் சிற்பங்களும் கோவிலை அலங்கரிக்கின்றன..வளாகத்தின் மய்யக்கோவிலானது முழுவதும் கற்களால் செதுக்கப்பட்டதாகவும், மய்யக்கோவிலை சுற்றியுள்ள விரிவுப்படுத்தப்பட்ட இன்ன சிற்பங்களும் சுவர்களும் மாடங்களும் எஃகு அல்லது காரை பயன்படுத்தாமல் ராஜஸ்தான் சிவப்பு மண்பாறை மற்றும் இத்தாலிய கற்கலவைகளால் எழுப்பப்பட்டு இருக்கிறது.இவற்றை ரசித்திருக்கும்போதே water showவுக்கான announcement ஒலிக்க show place நோக்கி நகர்ந்தோம்.குறும்புக்கார குழந்தைகள் சிலர் ஒரு ஏரிக்கரையை சுற்றி மகிழ்ச்சியாய் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து ஏரியில் மலர்ந்திருக்கும் பூக்களும் நடனமாடி மகிழ்கின்றன.குழந்தைகளின் மகிழ்ச்சிக்கும் அவர்களின் துன்புறுத்த வரும் சக்திகளுக்கும் நடக்கும் சண்டையில் இறுதியில் அன்பே வெல்கிறது.இப்படியான திரைக்கதை multi colour laser, video projection, underwater flames, waterjets மற்றும் surrounding sounds in symphony with lights என தொழில்நுட்பங்களின் உதவியுடன் காண்பதற்கு அழகான ஒலியொளி நிகழ்வாக நடந்தேறுகிறது.25 நிமிட இந்த ஒலியொளிக்காட்சி அனைவரும் வாழ்வில் ஒருமுறையேனும் பார்த்துவிட வேண்டிய ஒரு festival celebration Experience.Water show முடிந்தும் கூட கோவிலை சுற்றி ரசிக்க சில அவகாசம் கிடைத்தது.கோவிலின் மொத்த அமைப்பும் சுற்றுலாப்பயணிகளை கவரும் வண்ணம்,இந்திய வரலாறு,  ஸ்தல வரலாறு, சுவாமி நாராயணன் வாழ்க்கை வரலாறு கொண்ட புகைப்பட, ஓவிய மற்றும் பொருட்காட்சிகளும்,South Indian, north Indian, Chinese, Italian உணவு வகைகளை கொண்ட food courtம்,குழந்தைகளை கவரும் வண்ணம் மிகப்பெரிய தோட்ட அமைப்புமென பிரம்மாண்டமாக விரிந்திருக்கிறது.      

            Food court வந்த நான் ஒரு காபியும், சோனம் Dhabi balla & Allo chatம் order செய்து சாப்பிட்டு க்ளாக் ரூமில் உடமைகளை வாங்கி வெளியே வந்து சேர மேலும் 1/2 மணி நேரமானது இந்த சம்மர் வெகேஷனின் முதல் எபிசோடான அக்‌ஷர்தாம் விசிட் நிறைவடைந்தது.


                                                                                                   ~தீரா தேடல் தொடரும்...,