ஜோஷிமட் வந்து சேர மாலை மணி 5 ஆனது நாங்கள் புக் செய்திருந்த ஹோட்டலுக்கு வரும் போது சூரியன் அஸ்தமனமாகக்காத்திருந்தது ஜோஷிமட் கடல் மட்டத்திலிருந்து 6150 அடி (1875 mtr)உயரத்தில் அமைந்துள்ள ஒரு மலை நகரம்.ஜோஷிமட்டில் உள்ள ஒவ்வொரு மூலையிலிருந்தும் இமயமலைகளின் பார்வை அழகாக உள்ளது.ஹோட்டல் அறையில் எங்களது உடமைகளை வைத்துவிட்டு குளிர் வாட்டுவதைக் கூட பொருட்படுத்தாமல் இமயமலைத்தொடரை ரசித்தோம் பச்சை போர்வையில் அதன் முகடுகல் மட்டும் வெண் பணியாலும் மூடப்பட்டிருந்தது. குளிருக்கு இதமாக எங்கள் கைடு good day பிஸ்கட் மற்றும் காபியுடன் வந்து எங்களுடன் அடுத்த நாள் பயணத்திட்டம் பற்றி பேசலானார் அரை மணி நேர உரையாடலுக்கு பின் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் சென்று குளித்துவிட்டு ஜோஷிமட்யை சுற்றிப் பார்க்க கிளம்பினோம்.
![]() |
| Room view |
இது ஒரு சிறிய டவுன் இருபுறமும் கடைகள் குளிர்காலத்தில் உடுத்திக்கொள்ளும் உடைகள் இங்கு அதிகமாக விற்கப்படுகின்றன . மலையேற்றத்துக்கு தேவையான அனைத்து ஜெர்க்கிங்ஸ் ,ஜாக்கெட்ஸ்,மப்லர் ,கேப் ,பேக்பேக், கம்பளி மற்றும் பேக்கரி ,காய்கறி கடைகள் ,நகைக்கடை என அனைத்தும் இங்கு உள்ளது.நாங்கள் மலையேற்றத்திற்கு தேவையான அனைத்தும் வைத்திருந்ததால் சாப்பிட சில சாட்அயிட்டம் மட்டும் வாங்கிக் கொண்டோம். கொஞ்ச நேரம் சுற்றி விட்டு அங்கிருந்து புறப்பட்டு ஹோட்டலுக்கு வரவும் எங்கள் டின்னர் ரெடி ஆக இருந்தது இரவு உணவை முடித்து விட்டு டிவி பார்த்தோம் .
சிறிது நேரத்தில் chainsingh வந்து பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் முன்னதாக பிளான் செய்திருந்த பயண வழித்தடத்தில் மாற்றம் செய்திருப்பதாகக் கூறினார் எங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை இருந்தாலும் சூழ்நிலை காரணமாக ஏற்றுக்கொள்ள அதன் வழித்தடத்தை பற்றி chainsingh விளக்கினார் .
ஏப்ரல் 29 : கர்சி கிராமம் to குலாரா பேஸ்கேம்ப்
ஏப்ரல் 30 : குலாரா பேஸ்கேம்ப் to பங்கர்சுலா பேஸ்கேம்ப்
மே 1 : பங்கர்சுலா பேஸ்கேம்ப் to பங்கர்சுலா சப்மிட் மற்றும் மீண்டும் குலாரா
மே 2 : குலாரா to கர்சி (மாற்றுபாதையில் )
ஏப்ரல் 29
![]() |
| Sonam,me and chain singh |
காலை சீக்கிரமாகவே சிற்றுண்டி தயார் செய்திருந்தனர். 9 மணிக்கெல்லாம் சிற்றுண்டியை முடித்து கொண்டு அவரவர் தேவையான உடமைகளை சரிபார்த்து மதிய உணவை பேக் செய்து கிளம்பினோம்.45 நிமிட ஜீப் பயணம் மணி 10 கர்சி கிராமத்தை அடைந்தபோது அங்கிருந்து எங்கள் முதல் நாள் மலை ஏற்றம் ஆரம்பமானது. Cook மோகன் மற்றும் பிரிதம் பாபா டென்ட்,அடுப்பு மற்றும் சமைக்க தேவையான பொருட்களை mule லில் (கோவேறு கழுதை) ஏற்றிக்கொண்டு வேறு பாதையில் சென்று விட்டனர். நாங்கள் நால்வர் மற்றும் எங்கள் வழிகாட்டி chainsingh
ஒருவர் பின் ஒருவராக நடக்க ஆரம்பித்தோம்.
நான் இந்த கோடை காலத்தில் என் முதல் மலையேற்றத்தைஆரம்பித்திருக்கிறேன். தேவையான உடைகள், பவர்பேங்க் , மெடிக்கல் கிட் மற்றும் நான்கு லிட்டர் தண்ணிர் என கிட்டதட்ட 10 கிலோ பேக்கை தூக்கிக்கொண்டு நடப்பது சற்று சிரம்மமாக இருந்தாலும் மலையேற்றம் எனக்கு உற்சாகமாக இருந்தது .இதமான, புத்துணர்ச்சியூட்டும் மலைக் காற்றை சுவாசித்தேன் அது கிளர்ச்சியூட்டும் உணர்வை கொடுத்தது.
நான்கு புறமும் மரங்கள் பனியில் நனைந்திருந்தது ,ஆழமான மற்றும் சிறிய பள்ளத்தாக்குகளும் ,ஆடு மேய்ப்பர்களோடு சேர்ந்து காணப்படும் மலை நாய் என பார்த்துக்கொண்டு நடக்கலானோம் மலை நாய் என்னோட tigerஐ ( நிஜ புலினு நினைச்சுக்காதீங்க அது எங்க வீட்டு நாய் குட்டி )ஞாபகப்படுத்தியது அவனை பிரிந்து நான்கு நாட்கள் ஆனது நான் ஆபீஸிலிருந்து வீட்டிற்கு வந்தவுடன் என்னுடனே விளையாடிக்கொண்டு இருப்பான் நான் அவனை மிகவும் மிஸ் செய்கிறேன் .
![]() |
| மலை நாய் |
முதல் சில மணிநேரத்தில் மலை என்னை மிகவும் சோர்வாக்கியது நான் மிகவும்சோர்வடைந்து விட்டேன் என்னால் நடக்க முடியவில்லை அருகில் இருந்த பாறையில் அமர்ந்து சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டேன் மூச்சு விடுதல் சிரமமாக இருந்தது, என்னால் முடியாது என தோன்றியது .
வழிகாட்டி chainsingh பண்பானவர் என்னை ஊக்கபடுத்தினார் பழக இனிமையானவராக இருந்தார். பொதுவாக அமைதியாக இருந்தாலும் அவ்வப்போது எங்கள் உரையாடலில் கலந்து கொண்டார். உயரம் செல்ல செல்ல குளிர் அதிகமாகிக்கொண்டே இருந்தது. வால்நட் ,பைன் மரங்களை கடந்து மலை ஏரிக்கொண்டிருக்கிறோம் பாதை முடிவதாகத் தெரியவில்லை.மேலே செல்லச்செல்ல மலை கீழே போய்கொண்டிருக்கிறது .
மணி ஒன்று ஆனது ( 3 hrs climbing)கடந்து வந்த களைப்பு வால்நட் அல்லது ஏதோ ஓரு காட்டு மரம் தனியாக உயரமாக இருந்தது. அதன் அடியில் அமர்ந்து மதிய உணவை சாப்பிட ஆரம்பித்தோம் .ஏதோ ஒரு ஜீவராசியின் எலும்கூடு தென்பட்டன அதை வைத்து செல்பி எடுத்துகொண்டோம் .பாறையின் மேல் ஹய்கிங் ஸ்டிக் ஐ வைத்து " Iron throne மீது அமர்வது போல் நினைத்து விளையாடி மகிழ்தோம் .
மதிய உணவை முடித்துவிட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தோம் .சிறிது முன்னேறியதும் பெரிய மரங்களுக்கிடையே பிங்க் நிற பூச்செடிகள் பூக்களுடன் (pink Rhododendron) ஒரு தோட்டம் போல் காட்சி அளித்தது . எப்போ டவுன் ஹில் வரும் என கேட்டுக்கொண்டே வந்தேன் .
உயரம் செல்லச்செல்ல குளிர் அதிகமாகிக்கொண்டே இருந்தது, ஒரு இடத்தில் தூசி நிறைந்த பனி உறைந்து கிடந்தது அதுவே நாங்கள் தொட்டு ரசித்த முதல் பனி ,சிறிது முன்னேறியதும் கல் மேடையில் ஆரஞ்சு கொடியுடன் கோவில் இருந்தது அதன் அருகில் ஒரு பத்து நிமிடம் அமர்ந்து இளைப்பாறினோம் மலை ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தது ,அங்கிருந்து பார்க்கும்போது இயற்கையின் ரம்மியமான அழகை காணமுடிந்தது.இப்போது பனிமலை மிக அருகில் வந்து எங்களை உற்சாகமாக வரவேற்றது.மீண்டும் ...,வேறென்ன மலையேற்றம்தான்.
அந்த நாளின் பயணம் முடிவுக்கு வந்தது ஆம் மாலை 4 மணி இருக்கும் ஒரு சிறிய டவுன் ஹில் , கொஞ்ச தூரத்தில் சில ஆடுகள் மோய்ந்துகொண்டு இருந்தன அங்கு ஒரு நீரோடை அதை தாண்டி இரண்டு நீல நிற டென்ட் மற்றும் ஒரு மஞ்சள் வித் புளு நிற டென்ட் தெரிந்தது அதை பார்த்து நான் அடைந்த சந்தோசத்திற்கு அளவில்லை .சொர்கமே கண் முன்னால் தெரிந்தது ,"குலாரா
எங்கள் முதல் நாள் பேஸ்கேம்ப் . எங்களுக்கு இரண்டு மணி நேரம் முன்னதாகவே பிரிதம் மற்றும் மோகன் வந்து சேர்ந்திருந்தனர் தூரத்திலே எங்களை சிரிப்போடு வரவேற்றனர்.ஓடிபோய் பேக்பேகை வைத்துவிட்டு அங்கு போடப்பட்டிருந்த ஸ்லிப் ஸ்டூலில் அமர்ந்ததும் தான் ரிலாக்ஸ் ஆக இருந்தது . அதற்குள் தேனீரும் வாழைப்பழ பக்கோடாவும் சூடாக வந்தது .
ரசித்து சாப்பிட்டுவிட்டு பல போஸ்களில் போட்டோ எடுத்துக் கொண்டு நாங்கள் தங்கியிருந்த கூடாரத்தில் இருந்து சிறிது தூரம் அன்றைய பயண கதைகளை பேசிக்கொண்டு வாக்கிங் சென்றோம். அங்கிருந்த பாறையில் நின்று பார்க்கையில் பங்கர்சுலாவின் முகடு பால் வெள்ளையில் எங்களை பார்த்து கொண்டிருந்தது.
லேசான மழை தூர இருளும் எங்களை சூல குளிர் நடுக்க கூடாரத்துக்கு திரும்பினோம்.மேலும் ஒரு அடுக்கு ஜாக்கெட்ஸ் அணிந்துகொண்டு கிச்சன் டென்ட்டுக்கு சென்றோம் இதமான சூட்டோடு இருந்தது அரட்டை அடித்து கொண்டே dinner சாப்பிட்டுவிட்டு வெளிவரும் போது மழை தூரலும் நின்றிருந்தது நிமிர்ந்து பார்த்தேன் நான் கண்ட காட்சியை விளக்க வார்த்தைகளே இல்லை வானத்திற்கு எல்லை இல்லை என்பார்கள் ஆனால் அங்கு வானமே இல்லை நட்சத்திர கூட்டம் மட்டுமே சிரித்தது ஸ்டார் டிராக் ஆப் வைத்து நட்சத்திர குடும்பத்தை பார்த்து பிரமித்து நின்றோம். அதற்குள் பிரிதம் தீமூட்டி அதனை சுற்றி இருக்கைகள் அமைத்தார் .
![]() |
| Dinner |
நெருப்புக்கு அருகிலேயே இரு கைகளையும் நீட்டி குளிர்கய்ந்தோம் ஆனால் பின்பக்கம் குளிர ஆரம்பித்தது பின்பக்கம் திரும்பி குளிர்காய ஆரம்பித்தேன் முன்பக்கம் குளிர ஆரம்பித்தது இப்படியே கிரில் சிக்கன் போல் சுற்றி சுற்றி குளிர்காய்ந்தோன்.யோசித்துப் பாருங்கள் சுற்றிலும் உயர்ந்த பைன் மரங்களின் நடுவில் சிறிய சமவெளியில் கேம்ப் ஃபயர் இரண்டு நாட்களுக்கு முன் சந்தித்த நண்பர்களின் சுவரசியமான அனுபவங்கள் , வானத்தை மறைக்கும் நட்சத்திர கூட்டம் ,அமைதியான காடு கூடவே இளையராசாவின் இசை எவ்வளவு இனிமையான இரவு ..,மணி 9 இருக்கும் மழை ஆரம்பித்தது அவரவர் டென்ட்க்கு போய் ஸ்லீப்பிங் பேக்குள் புகுந்துகொண்டோம். மழையின் சத்தம் டென்ட்டின் மீது ராகம் பாட பயணக்களைப்பில் உறங்கிப்போனோம்.
~தீரா தேடல் தொடரும்...,














No comments:
Post a Comment