இந்தியாவின் மேற்கு கடற்கரை 5 க்கும்( malpe beach ,murudeshwar temple beach ,kudle beach ,om beach and paradise beach )மேற்பட்ட அழகிய கடற்கரைகளை பார்த்துவிட்ட எங்களுக்கு ஒரு நட்பின் மூலம் yana cave பற்றி தெரிந்தது.
யானா (Yana) என்பது கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டமான கும்தாவின் காடுகளில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும், இது அசாதாரண கார்ட் பாறை ( karst rock formations)அமைப்புகளுக்கு பெயர் பெற்றது. இது மேற்கு தொடர்ச்சி மலையின் சஹ்யாத்ரி மலைத்தொடரில் அமைந்துள்ளது.
அவர்
"if you have lots of money, go to Gokarna, if you have guts, go to Yana"என்றார்.
அவரின் வார்த்தைகள் எங்களுக்கு ஆர்வத்தை தூண்டியது.
நானும் பிரியாவும் காலை 6.30 மணிக்கு சென்றுகொண்டு இருக்கிறோம். வழி தெரியாது ஆனால் Google Map இருக்கும் நம்பிக்கையில் கிளம்பிவிட்டோம்.
gokarna பேருந்து நிலையத்திலிருந்து 50 கி.மீ ஸ்கூட்டர்( Rental scooter) பயணம் .
23 கி.மீ NH la போனதும் மலை ரோடு ஆரம்பிக்கும் .
ரொம்ப அதிகமா வண்டிகள் இல்லையென்றாலும் சில பஸ், லாரி , கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் எங்களை கடந்து போனது. நாங்கள் சென்றது sirsi/karwar/yana- Hubli high way ஆனாலும் அவ்வளவாக மனித நடமாட்டம் இல்லை .ஒரு இடத்தில் செக் போஸ்ட், அதை சுற்றிலும் உயர் ரக உணவு விடுதி ,சின்ன சின்ன கடைகள் மற்றும் வீடுகளும் இருந்தன . ஒரு சில இடங்களில் ரோடுகள் மோசமாக இருந்தது . மேலும் ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஒருவரிடம் வழி கேட்டோம்.
இடதுபுறம் yana cave செல்லும் வழியை காட்டினார். நேராக சென்றால் sirsi - kumta ரோடு .
இடதுபுறம் திரும்பி 15 கி.மீ பயணம் .இந்த பயணம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத பயணம். இதயத்தில் சரியான வழியா அல்லது தவறான வழியா என மாறி மாறி தோன்றியது இன்பத்தையும் வலியையும் ஒரே நேரத்தில் அனுபவித்தேன்.ஆள் அரவமற்ற பாதை. பெயர் பலகை கூடாத இல்லாத ஒரு இடம் .இந்த வழி நெடுக நாங்கள் பார்த்த மனிதர்கள் மொத்தம் 5 நபர்கள் மட்டுமே அதுவும் நாங்கள் 10 km பயணத்துக்கு பின்பு எங்களை ஆட்டோவில் கடந்து போனார்கள். நெட்வொர்க் சுத்தமாக இல்லை . Google சில சமயம் தவறாக கூட வழி காட்டும் என்று பயம் வேறு
சூரியன் அப்போது தான் எழுந்தது போல ஒளி கதிரை மரங்களுக்கு இடையே வீசிக்கொண்டு இருந்தான். காட்டு பறவைகளின் சத்தம் ,உடலை துளைகின்ற குளிர்ந்த காற்றின் தீண்டல்,எங்கள் ஸ்கூட்டர் சத்தம் இது மட்டுமே எங்கள் வழி துணை. பாதை நீண்டு கொண்டே போகிறது.எவ்வளவு தூரம் வந்துவிட்டோம் என்று கூட தெரியவில்லை. சரி ஆனது ஆகட்டும் என்று போய்க்கொண்டே இருந்தோம். ஆனாலும் இது ஒரு புதிய அனுபவம் பயம் கலந்த சந்தோசமாக இருந்தது.
சுமார் 10 km(approx) போய் இருப்போம் எங்களுக்கு பின்னால் ஆட்டோ சத்தம் அதில் இருந்தவர்களிடம் வழி கேட்டோம் .இப்படியே நேரா போங்க என்றார். அந்த ஆட்டோ டிரைவர்க்கு எங்களுடன் டிரைவ் பண்ண ஆசை போல எங்களுடனே அவரும் சிரித்துகொண்டே சிறிது தூரம் வண்டி ஓட்டி வந்தார் . பிறகு இடது புறம் செல்லும் சாலையில் திரும்பி சந்தோசமாக கை அசைத்து சென்றார் .மீண்டும் 4 கி.மீ மேல் போய்க்கொண்டு இருக்கிறோம் .ஒரு ஓடை சத்தம் கேட்டதும் வந்துவிட்டோம் என்று நிம்மதியாக இருந்தது.
நாங்கள் வந்த பாதையின் முடிவில் பஸ்கள் நிறுத்த கூடிய அளவில் பார்க்கிங் இருந்தது . அருகில் ஒரு டீ கடை .அங்கு நிறைய மனிதர்கள் இருந்தார்கள்.
இரு சக்கர வாகனங்கள் பார்க்கிங் செய்ய 10 ரூபாய் வாங்கப்படுகிறது.தண்ணீர் பாட்டில், ஸ்நாக்ஸ் எல்லாம் வாங்கி கொண்டு நடக்க ஆரம்பித்தோம்.
yana பார்க்கிங்ல இருந்து சுமார் இரண்டு கி.மீ நடை பயணம் .பாதி வழி மட்டும் டிரெயில் ரூட் மீதி எல்லாம் படிக்கட்டுகள், ஆங்காங்கே awareness பலகை, குப்பை தொட்டிகள் , பார்க்கில் இருபது போல அமருமிடம் என பாதைகள் சுத்தமா இருந்தது.அவ்வபோது அங்குள்ள பணியாளர்கள் சுத்தம் செய்துகொண்டே இருந்தனர் .
செல்லும் பாதையில் சிறிய ஓடைகள் குறுகிட்டன அதில் விளையாடிகொண்டே நடக்க வலது புறத்தில் ஒரு பிள்ளையார் கோவில் இருந்தது .
மேலும் மேலே சொல்ல இடது புறத்தில் ராக் தெரிந்தது .இது யான cave போலவே ஆனால் சிறியது . இதை பார்த்துக்கொண்டே செல்ல மூச்சு வாங்கியது . கடைசியில் yana cave வை பார்த்துவிட்டோம்.
இயற்கை எப்பவும் தனித்துவமானது அதற்கு பொருத்தமான ஒன்று Yana cave . பைரவேஸ்வர ஷிகாரா மற்றும் மோகினி ஷிகாரா என அழைக்கப்படும் இந்த இரண்டு பிரம்மாண்டமான பாறைகளுக்கு யானா பிரபலமானது.என் கண்முன்னே பிரமாண்டமான கருப்பு பாறை . பாறையை என்னை பார்த்தல் எறும்பு மாதிரி கூட தெரியமாட்டேன்😂😂.
பாறையை சுற்றிலும் காடு, பாறையின்(ஷிகாரா) கீழ் ஒரு குகை கோவில் உள்ளது.இந்த குகைக் கோயிலால் தான் யானா ஒரு புனித யாத்திரை தளமாகவும் இருக்கிறது,இந்த கோவிலின் பிரஹரத்துள் சென்று தான் நாம் குகை வாசலுக்குள் செல்ல முடியும் . பிரமாண்டமான குகை ஒரு வழியில் சென்று மறு வழியில் வெளியேறலாம்.இது கோவிலை சுற்றி வழிபட யாத்திரை வழியாக பயன்படுத்துகின்றனர்.
அரைமணி நேரம் சுற்றிவிட்டு திரும்பிவிட்டோம். Yana பார்க்கிங் வர 11 மணி ஆகிவிட்டது.திரும்பவும் 2 மணிநேர காட்டு வழி பயணம்.ஆனால் இப்போது பயம் இல்லை . நிறைய வாகனங்கள், டூர் பஸ்கள் எங்களுக்கு எதிர் திசையில் யானவை (Yana) பார்க்க சென்றன .
ஸ்கூட்டரில் 100 கி.மீ மேல் மலை பயணம். எல்லா பயணமும் மறக்கமுடியாத பயணம்தான் ஆனால் கொஞ்சம் பயமான பயணம் இதுதான். மொழி தெரியாத,பெயர் பலகை இல்லாத ஊர், மனித நடமாட்டம் இல்லாத காட்டு பாதை, ஆனால் எனக்கு இது ஒரு அற்புதமான அனுபவத்தை கொடுத்தது .